Police Recruitment

மதுரை, வில்லாபுரம், பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி, இரண்டு சிறுவர்கள் கைது

மதுரை, வில்லாபுரம், பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி, இரண்டு சிறுவர்கள் கைது

மதுரை மாநகர் 59வது வார்டுக்குட்பட்ட MGR தெரு கோழிப்பண்ணை சந்திப்பில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு பேர் வழிமறித்து அவரிடம் இருந்து பர்ஸ், 2500 ரூபாய் பணம், 2 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர் இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வில்லாபுரம் அவனியாபுரம் கணபதி நகர் கிழக்கு குடியிருப்பு நலச்சங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர், அவர்கள் அடுத்து உடனடியாக அவனியாபுரம் காவல் ஆய்வாளர் உயர்திரு பெத்தராஜ் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இரவு சரியாக 10.30 மணிக்கு அந்த திருடர்களை பிடித்து விட்டார்கள். அந்த திருடர்களை பிடிக்க உதவியாக இருந்த வில்லாபுரம் அவனியாபுரம் கணபதி நகர் கிழக்கு குடியிருப்பு நலச்சங்கத்தின் சார்பில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் இருந்ததால் உடனடியாக அவர்களை பிடிக்க சுலபமாக இருந்தது என காவல்துறையினரே தெரிவித்து சங்கத்தை பாராட்டி உள்ளனர். மேலும் 59வது வார்டுக்குட்பட்ட சிசிடிவி கேமரா அமைக்காத பகுதிகளில் சிசிடிவி அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள். ஆகையால் சிசிடிவி பொருத்தாத பகுதியில் சங்கம் அமைத்து பொருத்துமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.