மதுரை மாநகரில், போக்குவரத்துகாவல்துறை அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்
நேற்று 6 ம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணத்தால் திருப்பரங்குன்றம் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் மற்றும் பழங்காநத்தம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.லிங்கம்சாமி ஆகிய இருவரும் சேர்ந்து இன்று காலை போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுமாறு இருந்த பள்ளங்களை தங்களின் சொந்த முயற்சியினால் டிராக்டர் மூலமாக பள்ளங்களை சரி செய்து பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய வழிவகை செய்ததால் இருவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.