சிறப்பு மனு முகாம்கள் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் காவல்துறையினர்.
மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் விசாரணை செய்து மனுக்கள் முடிக்கப்பட்டு வருகின்றன. இப்பணி பொதுமக்கள் மனதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
