விருதுநகர் மாவட்டம்:-
சாலை பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கிவைத்தார் அதன் விபரம்…
அருப்புக்கோட்டை நகர் காவல்துறை துணை உட்கோட்டத்தில் சாலைபாதுகாப்பு வாரவிழாவானது இனிதே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் இருசக்கரவாகனங்களில் தலைகவசம் அணிந்து பங்கேற்றனர்.
அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் பெண்காவலர்கள் அணிவகுத்து நகரின் பிரதானசாலைகளில் அணிவகுத்து சென்றனர்.
இந்த அணிவகுப்பானது காந்திநகர் சாலையின் இறுதியில் சென்று முடிவடைந்தது பின்பு மாணவிகள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு காவல்துறை சார்பில் தேநீர் வழங்கப்பட்டது.
பின்னர் நிகழ்ச்சியின் நிறைவாக மாணவிகள் காவல்துறையினர் மத்தியில் அருப்புக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் உரையாற்றினார்.
வாகனத்தினால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு குறித்து மாணவிகள் மத்தியில் தெளிவுபடகூறினார் அதன் பின்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பம்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சரவணக்குமார்
இவர்களுக்கு உறுதுணையாக சார்பு ஆய்வாளர்களான திரு.செல்லதுரை, திரு.ஆனந்த் மற்றும் காவல் ஆளிநர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
