தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் ஒரு நிமிட கவத்து போட்டி
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முதன்முறையாக தீயணைப்பு சேவைக்கான நேரத்தினை துரிதப்படுத்தும் நோக்கில் தீயணைப்பு வீரர்களுக்கிடையை ஒரு நிமிட கவாத்து போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியின் நோக்கமானது தீயணைப்பு வீரர்கள் மனதளவிலும் உடலளவிலும் எந்நேரத்திலும் நொடிப்பொழுதில் தீயணைப்பு சேவைக்கு செல்ல தயாராகியிருக்க ஏதுவாக நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 346 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுகிடையே மாவட்ட வாரியாகவும் பின்னர் மண்டல வாரியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற ஐந்து மண்டல அணிகளுக்கிடையேயான மாநில அளவிலான போட்டி 23.01.2021 அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இப்போட்டி வட மண்டல அணியானது 54 வினாடிகளில் பயிற்சி முடித்து முதலிடத்தையும் தென் மண்டல அணி 60 வினாடிகளில் பயிற்சி முடித்துஇரண்டாம் இடத்தையும் பெற்றது.
இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு. சி. சைலேந்திரபாபு IPS ( இயக்குனர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை ) அவர்கள் பரிசு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குனர் (நிர்வாகம்) திரு.ஷாகுல்ஹமீது, வட மண்டல இணை இயக்குனர் திருமதி. பிரியா ரவிச்சந்திரன் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் திருமதி. மீனாட்சி விஜயகுமார் , தலைமையக துணை இயக்குனர் திரு. சத்தியநாராயணன், மத்திய மண்டல துணை இயக்குனர் திரு. சரவணகுமார் தென்மண்டல துணை இயக்குனர் திரு. விஜயகுமார், மற்றும் வடமண்டலத்தை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
