தூத்துக்குடி மாவட்டம்:-
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்…
நேற்று காலை ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேலை சார்பு ஆய்வாளர் பாலு கண்டித்துள்ளார்.
மேலும் அவர் பயன்படுத்தும் மினி லாரியை பறிமுதல் செய்து ஏரல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஏரல் காவல் நிலையத்துக்கு மது போதையுடன் வந்த முருகவேல் தனது மினி லாரியை தருமாறு கேட்டுள்ளார் அதற்கு அவர் முருகவேலை மாலைநேரம் காவல் நிலையம் வரச்சொல்லி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை காவல் நிலையம் வந்த முருகவேலை உதவி ஆய்வாளர் பாலு சத்தம் போட்டு அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து வாகனத்தை தர மறுத்ததை கண்டித்து உதவி ஆய்வாளர் பாலுவிடம் தகராறில் ஈடுபட்ட முருகவேல் பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு ஏரல் பகுதியில் பொது மக்களிடம் அவர் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருப்பதை அறிந்து அப்பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற சார்பு ஆய்வாளர் பாலு முருகவேலை கண்டித்து அப்பகுதியில் இருந்து விரட்டி அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் தனது நண்பர் ஒருவரின் மினி லாரியை எடுத்துக்கொண்டு வந்துள்ளார் அப்போது ஏரல் காவல் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் பாலு மீது மோதி கொலைசெய்து விட்டு தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
