Police Recruitment

திருவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது…

விருதுநகர் மாவட்டம் :-

திருவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்திய மாநில அரசால் கொரானா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது அறிந்திருந்தும் அரசு காவல்துறையின் அனுமதியில்லாமல் சட்டத்திற்கு புறம்பாக சாலையில் நடுவில் அமர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர் அவ்வாறு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை உடனிடியாக கைது செய்யப்பட்டனர்.

பாலமுருகன் த/பெ தங்கவேல் (வத்ராப் பேரூராட்சி பதிவரை எழுத்தர்) என்பவர் தலைமையில் 6 ஆண்கள் 12 பெண்கள் என மொத்தம் 19 பேர் கொடியுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 

நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செல்வி மலையரசி மற்றும் நகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு பாபு அகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள் மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published.