Police Recruitment

கள்ள காதலில் ஈடுபட்ட பெண்ணை கொலை செய்த மகன், மகன் ஜெயிலுக்கு போனதால் தாயின் உடலை வாங்க ஆளில்லை, செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர்

கள்ள காதலில் ஈடுபட்ட பெண்ணை கொலை செய்த மகன், மகன் ஜெயிலுக்கு போனதால் தாயின் உடலை வாங்க ஆளில்லை, செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர்

கள்ள காதலில் ஈடுபட்ட தாயை கொலை செய்த மகன் ஜெயிலுக்கு போனதால் உடலை வாங்க எவரும் முன் வரவில்லை.

மதுரை, செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான செல்லூர், மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சேகர் மனைவி வஞ்சிமலர் வயது 49, இவர் தன் கணவரை பிரிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக மகன் ஓம்சக்தி வயது 19, உடன் வசித்து வந்தார் வஞ்சிமலர் சமையல் வேலைக்கு சென்ற போது, உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது இது அவரது மகன் ஓம்சக்திக்கு பிடிக்கவில்லை, எனவே இது சம்பந்தமாக இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஓம்சக்தி அம்மிக்கல்லை தூக்கி தன்தாயின் தலையின் மீது போட்டார் இதனால் படுகாயமடைந்த வஞ்சிமலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செல்லூர் போலீசார் ஓம்சக்தியை கைது செய்து மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர். மகன் ஜெயிலுக்கு சென்று விட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்து வஞசிமலரின் பிணத்தை வாங்க உறவினர்கள் யாரும் முன் வரவில்லை இது சம்பந்தமாக செல்லூர் போலீசாரிடம் விசாரித்த போது. அவர்கள் கூறியதாவது. வஞ்சிமலர் தன் கணவர் சேகரை பிரிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது, இதனால் கணவர் மறு மணம் முடித்து குடும்பத்துடன் தனியே வாழ்ந்து வருகிறார் ஆனாலும் வஞ்சிமலர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை சமையல் வேலைக்கு போய் தன் ஒரே மகன் ஓம்சக்தியை கல்லூரி வரை படிக்கவைத்துள்ளார் வேலைக்கு போன இடத்தில் அவருக்கு உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்று நினைத்து வந்தார் அதற்கு அவரும் சம்மதித்திருந்தார்.டிரைவரின் மனைவி என்ற நிலையில் தன் மகனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருந்தார்.ஆனால் ஓம்சக்தி அவசரப்பட்டு திடீரென இப்படியொரு முடிவை எடுத்து விட்டார். வஞ்சிமலர் இறப்பிற்கு ஒருவரும் வரவில்லை, எனவே அவர்கள் வசித்த வீட்டின் உரிமையாளர் புழுதிப்பாண்டியன் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தார்கள், வாஞ்சிமலர் உடலை வாங்க உறவினர்கள் யாரும் வரவில்லை எனவே தல்லாகுளம் உதவி ஆணையர் அருண்குமார் அவர்களின் உத்தரவின்படியும், ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களின் முயற்ச்சியால் வாஞ்சிமலரின் உடலை செல்லூர் போலீசார் நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.