மதுரை, தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி, சக காவலர்கள் அதிர்ச்சி
மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக திரு. நந்தகுமார் பணியாற்றி வருகிறார், நேற்று இரவு PTR பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டுவந்தார் அப்போது ஒரு ஆடம்பரமான கார் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது, அந்த காரை ஆய்வாளர் நிறுத்தும்படி சைகை காட்டினார், ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து ஆய்வாளர் நந்தகுமார் அவர்களின் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இதனால் ஆய்வாளர் நந்நகுமார் அவர்களுக்கு தலை, கால் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது, உடனே அவரை சக காவலர்கள் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டனர், மேலும் இது சம்பந்தமாக ஆய்வாளர் நந்தகுமார் அவர்கள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற காரின் எண்ணை வைத்து மோதி காயப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தகுமார் அவர்களை கார் ஏற்றி கொல்ல முயன்ற இந்த சம்பவம் சக காவலர்களிடையை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தி தொகுப்பு.M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
