வழிதவறி வந்து மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர்
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி விளக்கு பகுதியில் வயதான முதியவர் மயக்க நிலையில் இருப்பதாக மாவட்ட தலைமைக் காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு (Master control) தகவல் வந்ததையடுத்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து காவலருக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக சென்ற முதல்நிலை காவலர் திரு.பேதுரு அவர்கள் முதியவரை மீட்டு அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தங்க வைத்து அவருக்கு உணவு வழங்கினார். அதன்பின் அவரை விசாரித்த போது in பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.