மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலி, தீயணைப்பு துறையினர் அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு உடல் மீட்கப்பட்டது
மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன்(18) அவரது நண்பர் பழனிவேல்ராஜன் (20) என்ற நபருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சரவனபொய்கையில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் லட்சுமணன் குளத்தில் குளிக்க சென்றுள்ளார் நண்பர் பழனிவேல்ராஜனுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் இறங்காமல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு இருந்தார்.
அப்போது லட்சுமணன் ஆழமான பகுதிக்குள் சென்றுள்ளார். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீருக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது.இதை கண்ட பழனிவேல்ராஜன் அதிர்ச்சி அடைந்து அருகில் இருப்பவர்களை அழைத்துள்ளார்.
மேலும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை பெற்றுக்கொண்ட திடீர் நகர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் திரு. வெங்கடேஷன் அவர்களின் தலைமையில் , தீயணைப்பு படை வீரர்கள் செந்தில்குமார், சிவகுமார்,, ராமர் மணிராஜா, வைரமுத்து, வில்வகுமார் ஆகியோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்,
தொடர்ந்து அரைமணி நேரம் தேடுதலுக்கு பிறகு லட்சுமணனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
உடலை பெற்றுக்கொண்ட திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
