மதுரை, டவுன்ஹால் ரோடு பகுதியில் பயங்கர தீ விபத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை
மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகர், அங்கயர்கண்ணி 4 வது தெருவில் வசித்து வருபவர் அப்சல் ரஹிம் மகன் ஆசிக்அலி வயது 37/21, இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் பாரிஸ் கார்மென்டஸ் என்ற பெயரில் துணிக் கடை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார், இந்த நிலையில் இவர் கடந்த 24 ம் தேதி இரவு 10.15 மணியளவில் கடை வியாபாரம் முடித்து விட்டு கடையை அடைத்து கொண்டிருந்த சமயம் பக்கத்திலுள்ள கடையின் மேற் கூரையிலிருந்து புகை வருவதை கண்டார், உடனே தீயணைப்பு துறைக்கு மற்றும் திடீர் நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் கூறினார், ஆனால் தீ மள மள வென்று வேகமாக பரவி அக்கம் பக்கம் உள்ள கடைக்கும் பரவியது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை முழுவதும் அணைத்தனர். இந்த தீ விபத்தினால் யார் உயிருக்கும் எந்த வித சேதமும் இல்லை, ஆனால் அக்கம் பக்கம் உள்ள கடைகளில் இருந்த ரூபாய் ஒரு கோடியே எழுபது லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின என தெரிய வநதது. இது சம்பந்தமாக திடீர் நகர் C1, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. முருகேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.