
மதுரை, செல்லூர் பகுதியில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை
மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லூர், அஹிம்சாபுரம் 7 வது தெரு விசாலம் பகுதியில் குடியிருந்து வருபவர் முத்துவேல் மனைவி கல்யாணசுந்தரி வயது 55/21, இவரது கணவர் முத்துவேல் அவர்கள் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள், அதில் மூத்த மகள் பெயர் திவ்யா வயது 28/21, இவருக்கு திருமணம் ஆகாமல் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு தன் தாயாருடன் வாழ்ந்து வந்தார். இரண்டாவது மகள் சாந்திதேவி திருமணம் முடித்து கோயம்புத்தூரில் வசித்து வருகிறார், இவர்களின் தாயார் கல்யாணசுந்தரி அவர்கள் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார், கடந்த 26 ம் தேதி இரவு 10 மணியளவில் இவரது தாயார் கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும் சமயம் வீட்டில் இருந்த திவ்யா தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார் அவரது உடல் தீபற்றி எரிவதை பார்த்து அவரது தாயார் சத்தம் போட அக்கம் பக்கமுள்ளோர் ஓடி வந்து தீயை அணைத்தனர், பின் நேதாஜி ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அதன் பின் திவ்யாவின் தாயார் தன் மகள் திவ்யாவின் இறப்பில் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து உடலை நல்லடக்கம் செய்ய வேண்டி செல்லூர் D2, காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர்(பொருப்பு) . திருமதி. ராதா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
