ஒசூர் அருகே நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் ஏற்ப்பட்ட மோதலை கலைக்க போலிஸ் தடியடி: காவல்துறையில் ஒருவருக்கு காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தமிழக மாநில எல்லையாக உள்ள கக்கனூர் கிராமத்தில் இன்று பாரம்பரிய எருதுவிடும் விழா நடைப்பெற்றது.
கர்நாடக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதியிலிருந்து 500 மேற்ப்பட்ட காளைகளும் மாநில எல்லை பகுதியில் நடைப்பெற்ற எருதுவிடும் விழாவினை காண 10000த்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில்,
எருதுவிடுவது தொடர்பாக அங்கு ஏற்ப்பட்ட வாய்தகராறு மோதலாக மாறிய நிலையில்
சண்டையை தடுப்பதற்காக பாகலூர் போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றபோது
கூட்டத்தில் இருந்து கல் வீசியதில் பாகலூர் காவல்துறையில் ஒருவருக்கு மண்டை உடைந்து இரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது
காயமடைந்த பழனிசாமி காவல் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
