திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொல்லைவழக்கில் ஆறு பேர் கைது
கடந்த 28/02/2020ஆம் தேதி ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றது. இதுகுறித்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திரு பீசா மெட்டல் உத்தரவின்பேரில் போலீசார் இன்று பெருந்துறையில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர் இதுதொடர்பாக வங்கி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர் அப்போது காரில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி அப்படியே அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் 69 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள வடமாநில இளைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது…
