காவல் துறையில் 55 வயது காவலர்களுக்கு இலகுவான பணி, DGP உத்தரவு
கொரோனா பரவல் அதிகரிப்பு, மற்றும் வெயில் தாக்கம் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலகுவான பணி ஒதுக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். தமிழக காவல்துறையில் டி.ஜி.பி முதல் கான்ஸ்டேபிள் வரை 1.11 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இவர்களில் 55 வயதிற்கு மேற்பட்ட போலீசார் 25 சதவீதம் பேர் உள்ளனர். அத்துடன் விபத்தில் சிக்கியவர்கள், நோய் தாக்கம் காரணமாக 5 சதவீதம் பேர் நீண்ட விடுப்பில் உள்ளனர். தற்போது கொரோனா பரவல் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு காவல் நிலையங்களில் இலகுவான பணி ஒதுக்கும்படி காவல் ஆணையர்கள், டி.ஐ.ஜி, ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. திரிபாதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்