Police Department News

மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை பற்றி தெரிந்து கொள்வோம்

மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை பற்றி தெரிந்து கொள்வோம்

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இதுவொரு மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.

வரலாறு

1965 வரை இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியை அந்தந்த மாநில ஆயுதப் படைகளே பாதுகாத்துவந்தன. 1965 ஏப்ரல் 9 குஜராத் மாநில கட்ச் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் சர்தார் போஸ்ட், சார் பெட் மற்றும் பெரியா பெட் ஆகிய இந்திய வீரர்கள் தாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1965 ல் நடந்து முடிந்தது. அதனையடுத்து இந்திய சர்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை என்ற வலிமையான படை டிசம்பர் 1, 1965 அன்று உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குநராக கே எஃப் ரஸ்டம்ஜி பொறுப்பேற்றார்.

பணிகள்

படையின் பணிகள் பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன

எல்லை பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஊக்குவிக்கிறது.
எல்லை தாண்டிய குற்றங்கள், ஊடுருவல் போன்றவைகளை தடுக்கிறது.
கடத்தல் மற்றும் வேறு எந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கிறது
சமீபகாலங்களில் உள்நாட்டு பாதுகாப்பிற்கும், உள்நாட்டு கிளர்ச்சியைத் தடுக்கவும் செய்கிறது.

குறைந்த அச்சுறுத்தலுள்ள இடங்களில் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கும்.
முக்கிய பணியிடங்களைப் பாதுகாகும்.
அகதிகள் கட்டுப்பாட்டில் உதவும்.
குறிப்பிட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஊடுருவல் புரியும்.

Leave a Reply

Your email address will not be published.