மதுரை, ஜெய்ஹிந்துபுரத்தில், பெண்ணை ஏமாற்றி நகை திருட்டு
மதுரை, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் மரியலீலா வயது 62, சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் அவரிடம் முதியோர் பென்சன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார் . அதை நம்பி மரியலீலா ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் இருந்த ஒரு வங்கிக்கு சென்றார், அங்கு வாலிபர் அவரை படம் எடுக்க வேண்டும் அதில் கழுத்தில், காதில் நகை இருந்தால் முதியோர் பென்சன் தர மாட்டார்கள் என கூறி அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை வாங்கி கொண்டார். சிறிது நேரத்தில் அந்த வாலிபர் அங்கிருந்து மாயமாகி விட்டார், மூதாட்டி மரியலீலா அவரை பல்வேறு இடங்களிலும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை இது குறித்து அவர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் மேலும் அங்கிருந்த CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்ததில் அதில் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி வயது 28, என தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.