விருதுநகர் மாவட்டம்.
ஶ்ரீவில்லிபுத்தூரில் ஹோட்டலில் திருடிய நபர் கைது.
ஶ்ரீவில்லிபுத்தூரில் சுரேஷ் புரோட்டா கடை பேருந்து நிலையத்தின் முன்பு உள்ளது.
இந்த புரோட்டா கடைக்கு சொந்தமாக குடோன் இதே பகுதியில் சிங்கமாடதெருவில் உள்ளது .
இந்த குடோனில்10.03.2021 அன்று இரவு 12:50 மணியளவில் குடோனின் உள்ளே புகுந்த திருடன் ரூ10,000/- ஐ திருடிவிட்டு சென்று விட்டான்.
மறுநாள் காலையில் குடோனை திறந்து பார்க்கும் போது யாரோ மர்ம நபர் உள்ளே வந்திருபதை அறிந்தனர்.
பின்பு பணம் வைத்திருந்த பீரோவும் திறந்து கிடந்தது பீரோவில் வைத்திருந்த 10,000/-ஐயும் கணவில்லை
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின்பு குடோனில் உள்ள CCTV காட்சியை பார்க்கும்போது இரவு 11:00 மணிக்கு குடோனை அடைத்த பிறகு சுமார் 12:50AM மணிக்கு ஒரு மர்ம நபர் உள்ளே வருவதை பார்த்தனர்.
அதன்பிறகு கடை உரிமையாளர் 16.03.2021 அன்று ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நகர் காவல் நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளர் திருமதி வினோதா அவர்களிடம் புகார் மனுவை அளித்தார்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் குற்ற பிரிவு சார்பு ஆய்வாளர் திரு ஆறுமுகசாமி அவர்களிடம் மேற்படி விசாரணைக்கு உத்தரவிட்டார்.
குற்றபிரிவு சார்பு ஆய்வாளர் உடனடியாக விசாரணையை தொடங்கினார்.
CCTV காட்சிகளை வைத்து சந்தேகப்படும் நபரை ஒப்பிடுகையில் இடையபொட்டல் தெருவை சேர்ந்த சுடலைமுத்து பாண்டி த/பெ சந்திரசேகரன் என்பதை அறிந்தனர்.
அதன்பிறகு திருட்டு வழக்கில் சம்மந்தபட்டவரை பிடிக்க சார்பு ஆய்வாளர் தலைமையில் குற்றபிரிவு போலீஸார் விரைந்தனர் .
அப்போது ஆத்துகடை சந்திப்பில் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர், அப்போது அந்த திருடன் குடோனில் உள்ளே புகுந்து ரூபாய் 10,000/- திருடியதை ஒப்புக்கொண்டான்.
பின்பு அந்த திருடனை கைது செய்து குற்றபத்திரிக்கை பதியபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
