மனித உயிர் பாதுகாப்பில் J9 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள்
சென்னை J9 துரைப்பாக்கத்தில் நடைப்பெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரு.வெங்கடேஷன அவர்கள் மீண்டும் கொரோனா அதிவேகமாக பரவுவதையொட்டி பள்ளிமாணவர்கள் மற்றும் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமான அறிவுரையாக துரைப்பாக்கம் ரேடியல்சாலை சந்திப்பில் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகிய அனைவருக்கும் சானிடைசர், இலவச முககவசம் கொடுத்து கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதையும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதையும் இலவசமாக கபசூரகுடிநீர் கொடுத்தும் ஒவ்வொரு மனித உயிரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதனை தன் அனுபவத்தின் மூலமாகவும் அரசாங்க விதிமுறைகள் மூலமாகவும் அறிவுரைகளை மக்களுக்கு வழங்கினார்.இப்படி மக்கள் பயன் பெறும் வகையில் கொரோனா விழிப்புணர்வை தினம் தோறும் ஏற்ப்படுத்தி வருகிறார்.
