
மதுரை மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற் சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைத்தல் தொடர்பாக, மதுரை கலெக்டரை தலைவராக கொண்டு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சங்கீதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேற்படி கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள், 1948, 15 (1) ( 2 ) மற்றும் 1958 தமிழ்நாடு உணவு நிறுவனங்களின் விதி 42 பி-ன் படி, வணிக நிறுவனத்தின் பெயர் பலகையில் நிறுவனத்தின் பெயரை தமிழில் பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்திருக்க வேண்டும் பிற மொழிகளில் பெயர் பலகை வைத்திருந்தால் தமிழில் பெரிய எழுத்துக்களில் முதன்மையாகவும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அதற்கு பின், பிற மொழிகளில் வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் ஒரு லட்சம் அல்லது இரண்டும் வழங்கப்படும் இரண்டாம் முறை பின்பற்றாத நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிக்க விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி சட்ட நடைமுறை குறித்து காலவரையறை வகுத்து வழங்கப்பட்டுள்ளது அதன்படி மே 1 முதல் 15 வரை நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை அமைத்தல் தொடர்பாக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வாய்ப்பு அளிக்கும்மாறும், மே 16 முதல் 30 வரை நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டு முரண்பாடு காணப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேற்படி தகவலினை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
