மதுரை, திருப்பரங்குன்றம் அருகே நிலையூரில் கட்டிட வேலைக்கு சென்ற தொழிலாளி வெட்டி படுகொலை
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலூகா, நிலையூர் நரசிம்மன் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் நந்தினிகுமார் வயது 34/21, இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ஜனார்தனன் என்ற 7 வயது குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நந்தினிகுமார் கட்டிட தொழிலாளர் வேலை பார்த்து வருகிறார் , இன்று காலை வீட்டிலிருந்து ஒன்பதரை மணியளவில் அருகில் உள்ள கட்டிடத்தில் சாமான்கள் எடுப்பதற்காக சென்ற போது, 3 பேர் கொண்ட மர்மக் கும்பல் அவரை வெட்டி சாய்த்தது, இதில் சம்பவ இடத்திலேயே நந்தினிகுமார் பலியானார். கொலை சம்பவம் குறித்து ஆஸ்ட்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தினிகுமாரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நந்தகுமாரின் கொலைக்கான காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணையில் நந்தினிகுமாருக்கும் சுரேஸ் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரியவந்தது. இதனால் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.