காவல்துறைக்கு பொதுமக்கள் எவ்வாறு சட்டப்படி உதவி செய்வது?பொது மக்கள் குற்றம் பற்றி அறிந்தால் தகவல் தர வேண்டியது அவர்கள் கடமை
அரசுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் போது, அல்லது நடைபெற இருக்கும் போது , லஞ்சம் நடமாடுதல், உணவு, மருந்தில் கலப்படம் செய்தல், உயிருக்கு ஊறுவிளைவிக்க கூடிய குற்றங்கள், திருட்டு, கொள்ளை, வன்முறை, பொது ஊழியர் நம்பிக்கை மோசடி , பொது சொத்துக்களை அழித்தல் அத்து மீறி வீடு புகுதல் , இது போன்ற பிணையில் விடக் கூடாத குற்றங்களைப் பற்றி கண் முன் பார்த்தாலோ, செவி வழியாக கேட்டாலோ, அல்லது எவ்வகையிலேனும் உணர்ந்தாலோ, உடனடியாக காவல் நிலையத்திலோ, நீதி மன்றத்திலோ தகவல் தர வேண்டும். அவ்வாறு தகவல் தராமல் அலட்சிய படுத்துவதோ, மறைப்பதோ, குற்றமாகும்
குற்ற விசாரணை முறைச் சட்டம் 1973, பிரிவு 39
சமுதாயத்தில் ஒரு குற்றம் நடைபெறும் போதோ அல்லது நடைபெறப் போவதாக அறியும் பொது மக்கள் தாங்களாகவே முன் வந்து தகவல் தர வேண்டும் என்று கு.வி.மு.ச. 39− வது பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
அந்த குற்றங்கள் நம்மை பாதிக்காவிட்டாலும் காவல் துறைக்கோ அல்லது நீதி துறைக்கோ தகவல் தர வேண்டிய கட்டாயம் இவ்விதியின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நமக்கேன் வீண் வம்பென்று விலகி செல்லக் கூடாது.
குற்றம் குறித்து தெரிந்திருந்தும் அக்குற்றம் குறித்து தகவல் வழங்காமல் இருப்பது இ.த.ச.1860 இன் 2 மற்றும் 3இன் படி குற்றமே ஆகும்.