சைக்கிள் திருடிய சிறுவனுக்கு போலீசார் சைக்கிள் பரிசு
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஒரு வீட்டில் சைக்கிள் திருட்டு போனதாக வீட்டின் உரிமையாளர்கள் போலிசிடம் புகார் அளித்தனர்.
காவல் நிலைய ஆய்வாளர் வினோத் கிருஷ்ணன் இதன் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி திருடனை கண்டுபிடித்தனர். ஆனால் திருடியது எட்டு வயது சிறுவன் என்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன், சைக்கிள் ஓட்டும் ஆசையால் பக்கத்து வீட்டிலிருந்த சைக்கிளை திருடியதாக ஒப்புக்கொண்டான். சைக்கிளை கைபற்றி உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சிறுவனையும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பினர்.
பின்னர் புது சைக்கிள் ஒன்றுடன் போலீசார் சிறுவன் இல்லத்துக்கு சென்று பரிசு அளித்தனர் இதனை பெற்றுக்கொண்ட சிறுவன் இனி மேல் திருட மாட்டேன் என்று உறுதியளித்தான்.