மதுரை,ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் ரேஷன் கடை ஊழியர் மீது தாக்குதல், இருவர் கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசார் நடவடிக்கை
மதுரை மாநகர், ஜெய்ஹிந்த்புரம், மீனாம்பிகை நகர் 9 வது தெருவில் வசிக்கும் சாம்பசிவம் மகன் , அண்ணாமலை வயது 51/21, இவர் அதே தெருவில் உள்ள ஒரு ரேஷன் கடையில் எடையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவரது சின்னம்மா புஷ்பா இறந்து விட்டார், அவரை பழங்காநத்ததிற்கு அருகில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்தனர், இந்த இறப்பு நிகழ்விற்கு இவரது உறவினர்கள் போஸ் மகன் அய்யனார், ராஜா ஆகியோர்கள் வந்திருந்தனர் அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 7 ம் தேதி காலை 11.40 மணியளவில் இவர் ரேஷன் கடையில் வேலையிலிருந்த சமயம் அய்யனார், ராஜா ஆகியோர் கடைக்குள் நுழைந்து மரக்கட்டையால் அடித்து தகராறு செய்துள்ளனர், உடனே நடந்த சம்பவத்தை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர், புகாரை தொடர்ந்து காவல் சார்பு ஆய்வாளர் திரு,சையது அப்துல்காதர் அவர்கள் வழக்கு பதிந்து சார்பு ஆய்வாளர் திரு.C.சோமசுந்தரம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.