தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம், பூ மார்கெட் பகுதியில் பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிய 7 பேர் கைது, பணம் ரூபய்.8,700/− பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ் ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் தூத்துக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கனேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.வேல்ராஜ்அவர்களின் தலைமையில் மத்திய பாகம் தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன், திரு.பென்சிங், திரு. மாணிக்கம், திரு.சாமுவேல், திரு. செந்தில்குமார், திரு. மகாலிங்கம் திரு முத்துப்பாண்டி, மற்றும் திரு. திருமேணி ராஜன், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மார்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குமாரர் தெருவை சேர்ந்த 1.அய்யம்பெருமாள் மகன் கண்ணன் வயது 46/21, திரவியம் புரம் 5 வது தெருவை சேர்ந்த 2, பெரியசாமி மகன் யோகக்குமார், வயது 31/21, அழகேசபுரம் 1வது தெருவை சேரந்த 3,கணபதி மகன் நயினார் வயது 41/21, திரவியபுரம் 4 வது தெருவை செர்ந்த 4, சங்கரராமன் மகன் சுந்தர மகாலிங்கம் வயது 35/21, சாரங்கபாணி தெருவை சேர்ந்த 5,ஆறுமுகம் மகன் லெக்ஷிமணன், முத்தையாபுரத்தை சேர்ந்த சேர்ந்த 6, நடராஜன் மகன் முத்துவேல் வயது 36/21, மற்றும் திரவியபுரம் 4 வது தெருவை சேர்ந்த 7, மாரியப்பன் மகன் மந்திர மூர்த்தி வயது 37/21, ஆகியோர் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதை பொருட்படுத்தாமல் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை உருவாக்கி சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மேற்படி தனிப்படையினர் சூதாட்டம் ஆடிய மேற்படி 7 பேரையும் கைது செய்து அவர்கள் சூதாட்டத்திற்காக வைத்திருந்த பணம் ரூபாய் 8,700/−யும் பறிமுதல் செய்தனர். இது குறித்து மத்திய பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துகிருஷணன் அவர்கள் தலைமை காவலர் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்