மதுரை மாவட்டம், மேலூரில் ரகசிய கேமராக்கள் பொறுத்தி ஊரடங்கை மீறி வாகனங்களில் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார்.
மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறாமல் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஊரடங்கை மீறி வாகனங்களில் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி ரகுபதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையே மேலூரில் நகைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் போலீசாருடன் இணைந்து 26 இடங்களில் சாலைகளில் ரகசிய கேமராகள் பொறுத்தி அவை காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளும் , போலீசாரும் அவர்களின் செல் போனிலும் சாலைகளில் உள்ள கேமராக்கள் மூலம் வாகனங்ளில் வருபவர்ளை கண்காணித்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சோதனைச் சாவடிகள் பல் வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வீட்டில் இருக்காமல் பொது இடங்களில் கூட்டமாக சுற்றி திரிகின்றனர். இதனை கண்காணித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பணியில் அதிக அளவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.