மதுரை, திருமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி டீ விற்றனை செய்தவர்களின் டீ கேன்கள் பறிமுதல், டி.எஸ்.டி யின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஊரடங்கால் டீ கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் திருமங்கலம் பகுதியில் 30 க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் டீ கேன்களை வைத்துக் கொண்டு டீ விற்று வந்தனர். இவர்களிடம் டீ குடிக்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக 25 க்கும் மேற்பட்ட டீ கேன்கள் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. வினோதினி அவர்களின் உத்தரவுபடி காவலர்கள் பறிமுதல் செய்தனர்.