தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவிய கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்து ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்
திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. M.S.முத்துச்சாமி IPS அவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி IPS, அவர்கள் மற்றும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் செயல்படும் நேதாஜி அறக்கட்டளை சார்பாக கம்பம் கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை, ஏளிய மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கியும் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
மேலும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பளர் அவர்கள் நோய் தொற்று பரவிய கிராமப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்கள்.