Police Department News

ஊரடங்கில் விளையாட்டு… போலீசார் இளைஞர்கள் மோதல்!

ஊரடங்கில் விளையாட்டு… போலீசார் இளைஞர்கள் மோதல்! 

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி துவங்கிய முழு ஊரடங்கானது ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி நகர்புற சாலைகளில் காவல்துறையினர் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நகரின் மையப் பகுதியில் மிக நெருக்கமாக உள்ள தெருக்களில் அதிக அளவில் கூட்டங்கள் கூடாமல் வீட்டில் தனித்திருக்க வலியுறுத்தி ஆங்காங்கே காவல்துறையினரும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் நேற்று இரவு 11 மணிக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பள்ளிவாசல் சுற்றி  அடங்கியுள்ள தெருக்களில் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு சென்ற ரமேஷ் என்ற காவலர் வாலிபர்களை கலைந்து போகச் சொல்லி எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் கலைந்து போகாமல் காவல்துறையினரை மிரட்டி அங்கிருந்து அடிக்காத குறையாக துரத்தி உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் ரகசியமாக காவலரை மிரட்டிய வாலிபர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய இளைஞர்களுக்கும் காவலர்கள் இடையே ஏற்பட்ட இந்த மோதல் காவல்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.