விருதுநகர் மாவட்டம்:-
கொரோனா நோய்த்தொற்றானது யாரையும் விட்டுவைப்பதிலை ஏழை பணக்காரனென்று.
அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்றினால் தப்பி பிழைக்கலாம் அவ்வாறு தேவையில்லாமல் சுற்றி திறிந்தால் பின்விளைவு நமக்குத்தான்.
ஊரடங்கு உத்தரவை மீறி சென்ற வாகனத்திற்கு அபராதம் மற்றும் பறிமுதல்.
அருப்புக்கோட்டை நகருக்குள் வாகன எண்ணிக்கையானது ஊரடங்கின்போது தேவையில்லாமல் வருவதை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்கள் நாடார் சிவன்கோவில் அருகே வாகன சோதனையை மேற்கொண்டார்.
அதன்பின்பு ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்களை தணிக்கை செய்தார் இந்த சோதனையில் பழைய இபாஸ் இருப்பதை கண்டுபிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தார்.
இந்த தொடர் வாகன சோதனையில் முறையாக இ பாஸ் இல்லாத இருசக்கர மூன்று சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஒருசில வாகனங்கள் வந்தவழியாக திருப்பியனுப்பபட்டன