மேலூர் அருகே சார்ஜர் போட்ட படியே செல்போனில் பேசியபோது, செல்போன் வெடித்து சிதறியதில் 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஆம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேதுராமலிங்கம். விவசாயி. இவரது மகன் தினேஷ். இவர் மேலவளவு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது.
அப்போது, வீட்டில் இருந்த தினேஷ், தனது செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, அவரது போனுக்கு அழைப்பு வரவே, சார்ஜரை கழட்டமால் அப்படியே தினேஷ் எடுத்து பேசியுள்ளார். அப்போது, செல்போன் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது.இதில் தலையில் படுகாயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மேலூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்