மதுரை, தத்தனெரி பகுதியில் டிரைவரிடம் பணம் வழிப்பறி செய்த மூவர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சடையாண்டி கோவில் தெருவை சேர்ந்த லெக்ஷமணன் மகன் சேகர் வயது 40/21, இவர் டாடா ஏஸ் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்,இவர் மதுரை தத்தனெரி மெயின் ரோடு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே கடந்த 10 ம் தேதி காலை 8.45. மணியளவில் நடந்து செல்லும் போது இவர் பின்னால் நடந்து வந்த 3 நபர்கள் இவரை டேய் நில்லுடா என்று அதட்டி உன் சட்டைப் பையில் உள்ள பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு போட என்றனர் உடனே இவர் நீங்க யாரு நான் எதுக்கு உங்களுக்கு பணம் தரனும் என்று கேட்க இவர்களை மிரட்டியவன் தன்னிடத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அடி வயிற்றில் வைத்து அழுத்தி உயிர் பயத்தை உருவாக்கி பையில் இருந்த 500/− ரூபாய் எடுத்துக் கொண்டு ஓடினர் உடனே இவர் சத்தம் போட பக்கத்திலிருந்த பாண்டியராஜன், செளந்திரராஜன் ஆகியோர் இவரை காப்பாற்ற ஓடி வந்தனர் அந்த சமயம் வழிபறியில் ஈடுபட்ட மூவரும் கத்தி காட்டி மிரட்டி அருகில் வந்தால் குத்தி கொலை செய்து விடுவோம் என கூறிக் கொண்டே தப்பி ஓடினர்.
பணத்தை பறிகொடுத்த சேகர் செல்லூர் D2, காவல்நிலையம் வந்து புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளான தத்தனெரி அருள்தாஸ்புரத்தை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் ஜெயகுமார் என்ற ஜெக்கு, வயது 25/21,அதே பகுதியை சேர்ந்த அனுமார் கோவில் தெருவில் வசிக்கும் முனியசாமி மகன் விஜயராஜன் வயது 23/21, மதுரை விளாங்குடியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி வயது வயது 25/21, ஆகியோரை பிடித்து ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின் கீழ் சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.