புதுக்கோட்டை, இது மகளீர் கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டர் முதல் அனைத்து முக்கிய பதவிகளிலும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கலெக்டர், எஸ்.பி., க்கள் உட்பட பல அதிகாரிகள் சமீபத்தில் பணி இட மாற்றம் செய்யப்பட்டன. இதன்படி புதுக்கோட்டை கலெக்டராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி., யாக நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டிள்ளார். புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., வாக அபிநயா, புதுக்கோட்டை டி.எஸ்.பி.,யாக லில்லி கிரேஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் போலீஸ் எஸ்.பி., யாக கீதா அவர்கள் பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக பூவதியும் சுகாதார பணிகள் துணை இயக்குனராக கலைவாணியும், முதன்மை கல்வி இயக்குனராக விஜயலெக்ஷிமியும் பணியாற்றி வருகிறார். புதுக்கோட்டை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக ஜெயலட்சுமி உள்ளார். மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளிலும் பெண்களாக இருப்பதால் புதுக்கோட்டை தற்போது மகளீர் கோட்டையாக மாறியுள்ளது.