கர்நாடகாவில் தங்க நகைகள் திருடிய இருவரை கேரளா வண்டிப்பெரியாறில் போலீசார் கைது செய்தனர்
கேரளா வண்டிப்பெரியாறு அருகே வாளாடியைச் சேர்ந்தவர்கள் குணா 28, பிரபு 32. இவர்கள் இருவரும் சமீபத்தில் கர்நாடகா கூணுாரில் உள்ள நகைக்கடையில் 2 கிலோ 800 கிராம் தங்க நகைகளை திருடி தப்பினர். கேரளா வந்த இவர்கள் வண்டிப்பெரியாறில் ஒருவரிடம் 150 கிராம் நகைகளை விற்பனை செய்துள்ளனர்.
தனியார் அடகு கடையில் 28 கிராம் நகையை அடகு வைத்துள்ளனர். கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டு கேரளா போலீசாரின் உதவியுடன் இருவரையும் கைது செய்து நகைகளை மீட்டனர்.