மதுரை மாடகுளம் பகுதியில் நடந்த சிறுவன் கொலையில் 3 நபர் கைது, S.S.காலனி போலீசார் விசாரணை
மதுரை மாநகர் S.S.காலனி C3,காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மகபூப்பாளையம் தாமஸ் காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார் மகன் சையத் ஈசா வயது 17, இவர் மாடகுளம் பகுதியில் காலி இடம் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மதுரை S.S.காலனி C3, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர் ஷீலா அவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் வீரா, அம்மையப்பன், மட்டை கம்பு சரவணன், நந்தா என்ற நந்தகுமார் உட்பட 11 பேர் சேர்ந்து தாக்கியதில் சிறுவன் இறந்ததாக தெரிகிறது.
பின்னர் வீரா, கார்த்திக், லோகேஸ், ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.மீதமுள்ள 8 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் வீராவின் தந்தையை கொலை செய்யப்பட்ட சையது ஈசா சில நாட்களுக்கு முன் தாக்கியுள்ளார் என தெரிய வந்தது. இதையறிந்த வீரா நண்பர்களுடன் சென்று சையது ஈசாவை கடத்தி சென்று தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சையது ஈசா உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.