Police Department News

காவல் ஆணையர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கையால்

காவல் ஆணையர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கையால்

மறைந்த மூத்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன் மனைவிக்கு 2 லட்சம் மீட்டுத் தரப்பட்டது!

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில், பள்ளிக்கரணை அருகே சுண்ணாம்பு கொளத்தூரை சேர்ந்த வி.சங்கர் என்பவரின் வீட்டை மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான டி.கே ரவீந்திரன் வயது 69 லீசுக்கு பேசி அவரிடம் ரூ 7.5 லட்சத்தை கொடுத்தார். சங்கர் வாக்குறுதி கொடுத்தபடி வீட்டையும் தரவில்லை , ரொக்கமாக வாங்கிய ரூ 7.5லட்சம் பணத்தையும் கொடுக்கவில்லை.

இதையடுத்து 15 .11. 2019 அன்று பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் கொடுத்தார்.

நாட்கள் செல்லவே பத்திரிகையாளர்கள் பாரதிதமிழன், அசதுல்லா,மாலைமுரசு பக்கிரியப்பான் உதவியுடன் அப்போதைய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து முறையிட்டார்.
இதையடுத்து, மூன்று லட்சத்தை வழங்கிய சங்கர் ஒரு மாதத்தில் பாக்கி 4.5 லட்சம் வழங்கி விடுவதாக உறுதி அளித்தார்.

ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் சங்கர் பணத்தைகொடுக்கவில்லை.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளான டி.கே.ரவீந்திரன் கடந்த 21.05.21 அன்று முதல் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனயின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமானது, ஏராளமான பணமும் செலவானது.

பரிதவித்த அவருடைய மனைவி பிரேமா வயது 61 சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களிடம் கடந்த 08.06.21 அன்று முறையிட்டு சங்கர் தரவேண்டிய 4.5 லட்சம் தொகையை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

காவல் ஆணையாளருடைய உத்தரவின் பெயரில் பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு மறுநாளே ரூபாய் ஒரு லட்சம் தொகையை மீட்டு ரவீந்திரன் மனைவியிடம் கொடுத்தனர்.

இந்த நிலையில், மிக மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் 14.06. 2021 அன்று மரணமடைந்தார். அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்கள் அடங்கிய குடும்பமே துயரத்தில் மூழ்கியது.

இந்த நிலையில் , மீதம் வரவேண்டிய 3.5 லட்சத்தில் ரூபாய் 2 லட்சத்தை பள்ளிகரணை காவலர்கள் நேற்று மீட்டு கொடுத்தனர்.

மீதமுள்ள 1.5 லட்சம் ரூபாயை அடுத்த மாதம் 8ஆம் தேதி தருவதாக சம்பந்தப்பட்ட நபர் உறுதி அளித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரனின் எதிர் பாராத மறைவால் இடிந்து போயிருந்த அவருடைய குடும்பத்திற்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் துரித,தொடர் நடவடிக்கை ஆறுதலைத் தந்துள்ளது. அவருக்கு அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.