Police Department News

ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது; ஐகோர்ட்டு மதுரைக் கிளை தீர்ப்பு

ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது; ஐகோர்ட்டு மதுரைக் கிளை தீர்ப்பு

மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்க தடை விதிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றபின்னர் பல்வேறு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் எடுத்த நடவடிக்கையின் பலனாக தமிழகத்தில் கொரோனா 2வது அலை வெகுவாக குறைந்த வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன.
மேலும் கூடுமானவரை சுத்தமான தமிழில் உத்தரவு பிறப்பிப்பதையும், கடிதம் எழுதுவதையும் கையாண்டு வருகிறார். அதன்படி மத்திய அரசை ஒன்றிய அரசு என்ற பேசியும் எழுதியும் வருகிறார். அவரது தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அதையே பின்பற்றுகிறார்கள்.
இதற்கு பல்வேறு விமர்சங்கள் வந்தன. ஆனாலும் அதை தமிழ்நாடு அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் உள்ளிட்டவற்றில், ஒன்றிய அரசு என பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள நிலையில், இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

ஐகோர்ட்டின் மதுரை கிளை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட முடியாது. மேலும் மனுதாரர் தமிழக மக்களுக்கு எதனைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார் என தெரியவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.