8 மாதங்களுக்கு முன்பு திருமண புரோக்கரை காரில் கடத்தி சென்று கம்பியால் அடித்து தாக்கி விட்டு 23 பவுன் நகையை பறித்து சென்ற குற்றவாளிகள் 3 பேர் கைது . 23 பவுன் நகைகள் மீட்பு.காரும் பறிமுதல்
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த திருமண புரோக்கர் கந்தசாமியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது நண்பனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று பணகுடியை சேர்ந்த சபரிவளன் புரோக்கர் கந்தசாமியை அழைத்துள்ளார். அவரும் வருகிறேன் என்று சம்மதிக்க துலுக்கர்பட்டியை சேர்ந்த சபரிவளனின் நண்பன் எல்கான்தாசன் காரில் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அன்று நண்பன் இல்லை நாளை வந்து பார்க்கலாம் என்று கூறி திருப்பி அழைத்து வந்து விட்டனர். இதேபோல் மறுநாள் காலையில் சபரிவளன் , எல்கான்தாசன் அவனின் நண்பன் ஸ்டாலின் ஆகிய 3 பேரும் புரோக்கர் கந்தசாமியை காரில் அழைத்து சென்றுள்ளனர். முப்பந்தல் அருகில் செல்லும் போது காரை ஆள்நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். சீறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி புரோக்கரையும் காரை விட்டு இறங்க சொல்லி உள்ளனர் . அப்போது மறைத்து வைத்து இருந்த கம்பியை எடுத்து அடித்துள்ளனர். படுகாயம் அடைந்த அவர் மயங்கி உள்ளார். இறந்து விட்டார் என நினைத்து அவர் அணிந்து இருந்த கை செயின் , மோதிரம் , செயின் என 23 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். சில மணி நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் புரோக்கரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பணகுடி காவல் ஆய்வாளர் சகாய சாந்தி சிறப்பாக துப்பு துலக்கி 3 பேரையும் கைது செய்தார். கைது செய்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சென்னை , திருநெல்வேலி பகுதிகளில் நகைகளை விற்பனை செய்தது தெரியவந்தது . அங்கு அவர்களை அழைத்து சென்று பறித்து சென்ற 23 பவுன் தங்க நகைகளும் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.