Police Department News

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக காவல்துறையில் சார்நிலை ஊழியர் மற்றும் உயர் அதிகாரி என்ற இரண்டு கட்டமைப்பு உள்ளது. இதில் சார் நிலை ஊழியர் என்பது இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் என்பது துணை காவல் கண்காணிப்பாளர்/உதவி காவல் கண்காணிப்பாளர் முதல் காவல்துறை தலைமை இயக்குனர் வரை உள்ளடக்கியது. இதில் உயர் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு என்பது என்றும் ஒரு நாள் கூட தள்ளி சென்றதில்லை செல்லவும் முடியாது.

எடுத்துகாட்டாக தமிழகத்தில் காவல்துறை தலைவர் மட்டுமே இருந்த காலத்தில் காவல்துறை இயக்குனர் என்ற புதிய பதவி ஏற்படுத்தப்பட்டது
இன்றோ ஒன்றுக்கு பத்து என்ற நிலையில் காவல்துறை இயக்குனர் பதவி உள்ளது
(பதவி இடம் காலி இல்லை என்றால் புதிதாக பதவி உருவாக்கப்படும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும்) கடை நிலை ஊழியர்களின் விடிவெள்ளியாக முன்னால் முதல்வர் கலைஞர் அவர்கள் காவர்கள் 10 ஆண்டுகள் பணி புரிந்தால் அவர்களுக்கு அடுத்த பதவி உயர்வு என்ற உத்தரவு போட்டதால் இன்று அனைத்து கடைநிலை ஊழியர்கள் காவலர்கள் உயர்பதவிக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்

ஆனால் அதே கடைநிலை ஊழியர்களின் ஒன்றான நேரடி தேர்வு செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது
உதவி ஆய்வாளர் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர் தாலுக்கா காவல் நிலையத்திற்கும் (சட்டம் மற்றும் ஒழுங்கு) இரண்டாவது மதிப்பெண் எடுத்தவர் ஆயுதப்படைக்கும் மூன்றாம் மதிப்பெண் எடுத்தவர் பட்டாலியனுக்கும் அனுப்பப்படுவர்

இன்றைய நிலையில் மூன்றாம் மதிப்பெண் எடுத்த நபரும் இரண்டாம் மதிப்பெண் எடுத்த நபரும் பதவி நிலையில் உயர் பதவியில் சென்றுவிட்டனர்.
இதில் முக்கிய விசயம் அடுத்த பேட்ச் உதவி ஆய்வாளர்களும் ஆய்வாளர் பதவி நிலைக்கு சென்றுவிட்டனர் 2008 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த நேரடி உதவி ஆய்வாளர்கள் 13 ஆண்டுகள் நிறை வடைந்தும் இன்னும் உதவி ஆய்வாளர்களாகவே பணி புரிந்து வருகின்றனர்.

காவலர்களுக்கு வழங்கியது போன்றே நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் 10 ஆண்டுகள் நிறைவடைந்த உடன் ஆய்வாளர்பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேரடி உதவி ஆய்வாளர்களின் மனக்குமுறலுக்கு தீர்வு காண்பாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்

நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நேரடி உதவி ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் எதிர்பரப்பிற்கு விடிவு பிறக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.