திண்டுக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 11.08.2022 தேதி முதல் வருகிற 19.08.2022 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வீ. பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் அதனை தொடர்ந்து அவர் தலைமையில் ‘போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமால் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன், போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் போதைப்பொருட்களின் உற்பத்தி நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழகத்தில் வேரறுக்க காவல்துறைக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர்.