Police Department News

காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மோதல்.. நீதிமன்றங்களில் வழக்காட பார் கவுன்சில் அதிரடி தடை

காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மோதல்.. நீதிமன்றங்களில் வழக்காட பார் கவுன்சில் அதிரடி தடை

சென்னை, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் வழக்காட தடை விதித்து தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெருவை சேர்ந்தவர் தாமஸ் தனசீலன், இவரது வீட்டருகே பத்ம நாபன் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கோட்டூபுரம் நாயுடு தெரு 4-வது சந்து பகுதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முன்வந்த போது, சாலைகள் அமைத்தால் தனது வீட்டில் மழைநீர் புகுந்துவிடும் எனக்கூறி பத்மநாபன்,தாமஸ் சீனிவாசனுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17-ம் தேதி இரு தரப்பினரும் வீட்டின் அருகிலேயே சாலை அமைப்பது தொடர்பாக மோதிக்கொண்டனர் . மோதிகொண்ட விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு இரு தரப்பினரும் சில வழக்கறிஞர்களுடன் வந்துள்ளனர்

அப்போது கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குள் வந்த இரு தரப்பு வழக்கறிஞர்களும் சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியானது.

இதனையடுத்து சாலை அமைப்பது தொடர்பாக மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாகவும் காவல்நிலையத்தில் மோதிக்கொண்டு விவகாரம் தொடர்பாக மூன்று வழக்குகளை கோட்டூர்புரம் காவல்துறை பதிவு செய்தது. இது தொடர்பால் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிடம் புகார் அளித்தார்.

சட்டவிதிகளை மீறி மோதிக் கொண்ட சைதாப்பேட்டை வழக்கறிஞர் சங்க செயலாளர் ஏங்கல்ஸ், மற்றும் பாலமுருகன் மணிகண்டன், பத்மநாபன் ஹரிஹரன், நெப்போலியன் ஆகிய 6 பேரும் வழக்கறிஞராக பணி செய்வதற்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published.