கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி, முத்தூர், காமராஜ்நகரை, சேர்ந்த வைரமுத்து என்பவரின் மகன் அதிசயபாண்டியன் வயது 46 மற்றும் வாகைக்குளம், நடுத்தெருவை சேர்ந்த சிவகுரு என்பவரின் மகன் தீபக்ராஜா வயது 27,
இருவரும் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாழையூத்து காவல் ஆய்வாளர், திரு. பத்மநாப பிள்ளை, அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், 28.08.2021 இன்று எதிரி அதிசயபாண்டி என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையிலும், தீபக் ராஜா என்பவரை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர்..