Police Department News

விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும், நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா தொற்று பரவல் இல்லாத மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறும், நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொரோனா தொற்றை தடுப்பதற்கு பல்வேறு
முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யலாம். தங்களது இல்லங்களின் வெளியே விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கிடையாது, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவவோ அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கோ மற்றும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நிர் நிலைகளில் கரைப்பதற்கோ, ஒலி பெருக்கி பயன்படுத்தவோ அனுமதி கிடையாது, வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை தனி நபராகவோ அல்லது இரு நபர்களாகவோ சென்று நீர் நிலைகளில் கரைக்கலாம், இதற்கு தனி நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், அமைப்பாக செயல்படுவதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக மேற்கூறிய நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆகவே பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மேற்கண்டவாறு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து, கொரோனா தொற்று பரவல் இல்லாத மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுவதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறும், மேற்படி நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.