Police Department News

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும்

குற்றங்கள் குறைய தண்டனை வழங்களில் மாற்றம் வேண்டும்

நில ஆக்கிரமிப்பு என்பது ஒரு சிவில் பிரச்சினைதானே ? இதில் யார்க்காவது பிரச்சினை முடிந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும் . கீழ்கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பீல் செய்து பல வருடம் கிடப்பில் போட்டு வைத்து விடுவார்கள் . அலைந்து அலைந்து அலுத்துப் போய் இடையில் விட்டு விட்டவர்கள்தான் ஏராளம் .

ஆனால் , தமிழ்நாட்டில் இன்று நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஒன்று மாவட்டம் தோறும் ஏற்படுத்தப்பட்டு , தவறு செய்தவர்கள் மீது எப்.ஐ.ஆர் . பதிவு செய்து , பெரிய பெரிய வி.ஐ.பி. , மாஜி மந்திரிகளைக்கூட கைது செய்து சிறையில் அடைத்து கம்பி எண்ண வைத்தது எத்தனை அற்புதம் ?

இந்த வழக்குகளில் சொத்தைத் தவறாகப் பதிவு செய்திருந்தால் அந்த சார் – பதிவாளரையும் எதிர்மனுதாராகச் சேர்க்க வேண்டும் சார்பதிவாளர்கள் மீது எப்.ஐ.ஆர் . பதிவு செய்தல் வேண்டும்..

தற்போது பத்திரப்பதிவு சார் – பதிவாளர் அலுவலங்கள் எல்லாம் கோர்ட் போலவே நடக்கிறது என்பது ஒரு நல்ல மாற்றம் என்று சொல்லலாம் .

தற்போது நாம் உபயோகப்படுத்துகிற இந்திய தண்டனைச் சட்டம் பிரிட்டிஷார் காலத்தில் இயற்றப்பட்டதாகும் .

இதில் குற்றங் குறைகள் அதிகம் இல்லை என்றாலும் விசயங்கள் தெளிவாக இல்லை என்பதுதான் உண்மை .
மனித வாழ்க்கையில் இன்று பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது குடும்பப் பிரச்சினைதான் இந்த குடும்பப் பிரச்சினை பற்றி இந்தியத் தண்டனைச் சட்டத்தில் பட்டும் படாமலும் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .

இன்று நாம் முதலாவது செய்ய வேண்டிய சீர்திருத்தம் – திருமணம் முடிந்ததும் தம்பதிகளை தனிக் குடித்தனம் வைக்க வேண்டுமே தவிர , மாப்பிள்ளை வீட்டில்தான் வாசம் செய்ய வேண்டும் என்பதை குற்றமாகக் கருத வேண்டும் .

தனிக் குடித்தனம் வைத்துவிட்டாலே மாமியார் மருமகள் யுத்தம் சுத்தமாக ஓய்ந்துவிடும் .

இந்த சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டால் குடும்பப் பிரச்சினை மட்டும் அல்ல , வாழ்க்கைப் பிரச்சினையே காணாமல் போய்விடும் .

குற்றவாளிக்குத் தண்டனை வழங்குவதன் நோக்கம் அவன் திருந்தி வந்து நல்லவனாக மாற வேண்டும் என்பதுதான் .

ஆனால் , தற்போதுள்ள நடைமுறை குற்றவாளிக்குத் தண்டனை வழங்கினால் போதும் என்கிற அளவில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது .

அதனால் குற்றத் தண்டனை பற்றி பல திருத்தங்கள் வேண்டும் . ஒரே குற்றத்தை மறுபடியும் செய்தால் இரண்டு மடங்கு தண்டனை என்றால் தொடர் குற்றவாளிகள் ரவுடிகள் எல்லாம் எப்படி உருவாக முடியும் ?
சற்று சிந்தித்தால், மாற்றங்கள் தானாக வரும்.

Leave a Reply

Your email address will not be published.