Police Department News

பசியுடன் சாலையில் திரிந்த இளைஞருக்கு உதவிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்!

பசியுடன் சாலையில் திரிந்த இளைஞருக்கு உதவிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்!

விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் ADSP முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் சாத்தூரில் ரோந்து பணி மேற்கொண்ட போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அழுக்கான உடைகளுடன், ஒரு அழுக்கு பையுடன், தலையில் அதிக முடி மற்றும் தாடியுடன் சுற்றித் திரிந்துள்ளார்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதி சைபர் கிரைம் ADSP அவர்கள் விசாரித்தபோது அந்த இளைஞர் எனக்கு தமிழ் தெரியும் என்று தெரிவித்துள்ளார். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என கேட்க அந்த இளைஞர் தனக்கு சாப்பாடு வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாப்பாடு வாங்கி தருகிறேன், நீங்கள் எந்த ஊர் என்று கேட்க பக்கத்து கிராமத்து பெயரை சொல்லியுள்ளார். பெயிண்டர் வேலை பார்த்ததாகவும் வேலை சரியாக கிடைக்காத காரணத்தாலும், தாய் தந்தையர் இல்லாததாலும் இப்படி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இளைஞருக்கு முடி திருத்தும் நிலையத்தில் முடி திருத்தம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, சாத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாக்கியராஜ் மற்றும் காவலர்களை வரவழைத்து அறிவுரைகள் வழங்கி அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களும் அதனை ஏற்று அருகிலேயே குளிக்கவும், சாப்பிடவும் வைத்து, புத்தாடை அணிவித்து, இனி ஊருக்கு சென்று ஏதாவது வேலை பார்க்க வேண்டும், இப்படி சுற்றி திரியக்கூடாது என்று அந்த இளைஞருக்கு அறிவுரைகள் வழங்கி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த மனிதநேய மிக்க மாமனித காவல் அதிகாரிகளை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.