Police Recruitment

கடலூர் மாவட்டம் பன்ருட்டியில் கடந்த 03.11.19தேதி பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைக்காமல் சாவி மூலம் கதவை திறந்து 25பவுன் தங்க நகைகள் மற்றும் 1/2 கிலோ வெள்ளிநகை. ,ரூபாய் 2,00000 பணம் திருடப்பட்டு மிளகாய்பொடி தூவபட்டு இருந்தது.

கடலூர் மாவட்ட செய்திகள்:-

கடலூர் மாவட்டம் பன்ருட்டியில்
கடந்த 03.11.19தேதி பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைக்காமல் சாவி மூலம் கதவை திறந்து 25பவுன் தங்க நகைகள் மற்றும் 1/2 கிலோ வெள்ளிநகை. ,ரூபாய் 2,00000 பணம் திருடப்பட்டு மிளகாய்பொடி தூவபட்டு இருந்தது.

அதன் விபரம் பின்வருமாறு……

கொள்ளை நடந்த வழக்கினை கடலூர் மாவட்ட SP. திரு.அபிநவ் IPS அவர்களின் உத்தரவு படி பன்ருட்டி DSP திரு.நாகராஜன் அவர்களின் மேற்பார்வையில்,

பன்ருட்டி ஆய்வாளர் திரு.சன்முகம் தலைமையில் Crime SI திரு.ரமேஷ்குமார்.. குற்றபிரிவு போலிசார் திரு.ராஜேந்திரபிரசாத்..திரு.ஆனந்த் , திரு.சபரிநாதன். திரு.மணிகன்டன் ஆகியோர் கொண்ட தனிபடை பல்வேறு கோணங்களில் தேடியநிலையில்,

பழைய குற்றவாளிகளை விசாரித்தும் புலன் கிடைக்கவில்லை. புகார்தாரரிடம் வேலை செய்த 17 நபர்களிடம் விசாரனை மேற்கொண்டதில் சம்பவ இடத்தில் இருந்த ஒற்றை செறுப்பு காலடியும் .அவரிடம் 25ஆண்டுகளாக வேலை செய்த ஒருவரின் காலடியும் ஒரேமாதிரி இருந்து ஒத்துப்போனது

அவர் மீது சந்தேகம் வர அவரை அழைத்து வந்து கைரேகை எடுத்ததில் சம்பவ இடத்தில் இருந்த கைரேகையுடன் ஒத்துபோனது. மேலும் அவரை தொடர்ந்து விசாரிக்க அவர் திருடிய 25பவுன் தங்கநகைகள் 545கிராம் வெள்ளிநகைகள் மற்றும் பணம்ரூபாய். 1,52,000 மீட்கபட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கபட்டார்,துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

குற்றவாளியை துப்பறிந்து பிடித்த
காவல்துறையினர்க்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன் MA,Mphil மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.