Police Department News

கள்ளக் காதலால் வாலிபர் வெட்டி படு கொலை

கள்ளக் காதலால் வாலிபர் வெட்டி படு கொலை

மதுரை மாநகர், சுப்ரமணியபுரம், ஹரிஜன் காலனியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் கனேசன் வயது 49/21, இவர் மதுரை மாநகராட்சியில் 79 வது வார்டில் தினக்கூலியாக சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீட்டு வேலை செய்து வருகிறார், இவர்களுக்கு ராமச்சந்திரன் என்ற ஒரே மகன் வயது 28/21, உள்ளார்.இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சோலைஅழகுபுரத்தில் குடியிருக்கும் செளராஷ்ரா வகுப்பை சேர்ந்த சிவஜோதி என்பவருக்கும் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 5 வயதிலும், 1 வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் தினக்கூலி வேலை பார்த்து வருகிறார் சில சமயம் டிரம் செட் வேலைக்கு போவதுன்டு, ராமச்சந்திரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகள் ராஜலெட்சுமிக்கும் ஒன்னரை வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது, இந்த நிலையில் பாலு மகன் சேகர், பாலுவின் மருமகன் தண்டபாணி ஆகியோ இதை கண்டித்துள்ளனர், ஆனால் அதையும் மீறி இவர்களது தொடர்பு நீடித்து வந்துள்ளது, இதனால் ஆத்திரமடைந்த பாலு, சேகர், தண்டபாணி ஆகியோர் கடந்த 17 ம் தேதி மாலை 7.15 மணியளவில் M.K.புரம், சுப்ரமணியபும் சந்திப்பு, பழைய லாலா கடை எதிரில் ராமச்சந்திரன் நடந்து வரும்போது பாலு, அவரது மகன் சேகர், அவரது மைத்துனர் தண்டபானி ஆகியோர் ராமச்சந்திரனை வழி மறித்து சரமாறியாக வெட்டியுள்ளனர், சம்பவ இடத்திற்கு வந்த ராமச்சந்திரன் தாய், தந்தையர் மற்றும் மைத்துனர் ஆகியோர் வெட்டுப்பட்ட ராமச்சந்திரனை அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர், அங்கு ராமச்சந்திரனை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர், இதனைத் தொடர்ந்து ஜெய்ஹிந்து புரம் B6 காவல் நிலையத்தில் ராமச்சந்திரனின் தகப்பனார் கனேசன் புகார் அளித்தார் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. C.சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து எதிரிகளான கருப்பன் மகன் பாலு, பாலு மகன் சேகர், காசி மகன் தண்டபானி ஆகியோரை கைது செய்து ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் விசாரணை செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.