தேசிய மற்றும் மாநில சாலைகளில் ரோந்து எண்ணிக்கை அதிகரிப்பு – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 நெடுஞ்சாலை ரோந்து பிரிவினை
19.09.2021 அன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி தனிக்கை செய்தும், தேவையான அளவிற்கு ரோந்து பிரிவில் ஆளிநர்களை அதிகரித்தும், மேலும் அதற்குரிய உபகரணங்களை ஆய்வு செய்தும், பற்றாக்குறையாக இருந்த ரோந்து வாகனங்களை கணக்கெடுத்து தேவையான உபகரணங்களை அதிகப்படுத்த ஆவண செய்தார். மேலும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவினர் 24 மணி நேரமும் பணிபுரிய, இரண்டு சுழற்சி முறையில் பணிபுரிய உத்தரவிட்டடுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில சாலைகளில் ரோந்து செய்து விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல்
தடுக்கவும், இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றியும் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏதும் ஏற்படா வண்ணம் செயல்பட சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை ரோந்து பொறுப்பு
அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் அதனை சம்பந்தபட்ட உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து கண்காணித்து அவரவர் எல்லையில் எவ்வத போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படாவண்ணம் இருக்கவும், அனைத்து நெடுஞ்சாலை ரோந்து பிரிவினர் மணிக்கு ஒருமுறை தங்கள் இருப்பிடத்தை மாவட்ட ரோந்து பணி வளைகுழுவில் பதிவிடுமாறும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி தக்க அறிவுரை வழங்கினார்