மற்றவருக்காக நாம் ஜாமீன் கொடுக்கலாமா?
ஜாமீன் கொடுப்பது என்றாலே பலருக்கும் அலர்ஜி தான் காரணம், நாம் ஜாமீன் கொடுக்க போய் அதனால் சட்டப் பிடியில் சிக்கிக் கொள்வோமோ? என்று எண்ணுவது தான் ?
இப்படி எல்லோரும் நினைத்தால் ஆதரவு இல்லாதவர்களுக்கு யார் தான் ஆதரவு தருவது?
நாம் யாருக்காக வேண்டுமானாலும் ஜாமீன் கொடுக்கலாம்? எப்படி கொடுக்க முடியும் என கருதலாம்? எல்லாம் ஒரு நம்பிக்கையின் பேரில் தான் அந்த நம்பிக்கையை காப்பாற்ற விட்டால் என்ன செய்வது?
நம்பிக்கை மோசடி வழக்கு தொடர வேண்டியது தானே? பொதுவாக ஜாமீன் கொடுப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவரிடம் நம்பிக்கையூட்டும் ஆவணம் ஒன்றை எழுதி வாங்கிக் கொண்டு அதன் பிறகு ஜாமீன் தரவேண்டும்.
அதன்பிறகு நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் செயல்பட்டால் நீங்கள் அளித்துள்ள பிணையை அதாவது ஜாமீனை திரும்ப பெற்றுவிடலாம்
எப்படி என்றால் கு.வி.மு.ச. 1973 இன் விதி 444 (1)படி நீங்கள் நீதிமன்றத்தில் வழங்கியுள்ள பிணையை அதாவது ஜாமீனை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு திரும்பப் பெறப்பட்ட பிணையில் அதாவது ஜாமினில் வெளி வந்துள்ள நபருக்கு கு.வி.மு.ச. 1973 இன் விதி 444(2) படி நீதிமன்றம் பிணையில் வெளியேயுள்ள நபருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கும்.
வாரண்டு படி கைது செய்யப்பட்டாலும் அல்லது தாமாக முன்வந்து சரணடைந்தாலும், விலகிக்கொண்ட பிணையாளர்களுக்கு பதிலாக மாற்று பிணையாளர்களை நீதிமன்றம் கோரவேண்டும்,
அப்படிப் பிணை யாளர்கள் திறுத்தப்படவில்லை எனில் அவரை சிறைக்கு அனுப்ப கு.வி.மு.ச. 1973 இன் விதி 444 (3) அறிவுறுத்துகிறது.
அதனால் நாம் தைரியமாக ஜாமீன் கொடுக்கலாம்.